எழுத்தாளர்களுக்கு சிங்காரவேலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
July 20 , 2017 2939 days 1719 0
தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சிறந்த எழுத்தாளருக்கு ஆண்டு தோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுவோருக்கும், சமுதாய முன்னேற்றத்திற்காவும், சமத்துவக் கொள்கைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுவோர்களில் சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இவ்விருது வழங்கப்படும். விருதுத் தொகையாக ஒரு லட்சமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும் பரிசாக வழங்கப்படும்.
சிங்காரவேலர் குறிப்பு
ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - பிப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
மலையபுரம் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர், பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.