எவரெஸ்ட்டில் கோவிட்-19 தொற்று வரம்பினை குறிக்கும் எல்லைக் கோடு
May 14 , 2021 1647 days 688 0
எவரெஸ்ட் சிகரத்தில் கொரானா வைரசின் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அதன் உச்சியில் எல்லைகளைப் பிரித்து காண்பிப்பதற்கான எல்லை கோடு ஒன்றினை வரைய சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த எல்லைக் கோடானது நேபாள நாட்டிலிருந்து மலை ஏறுபவர்களுக்கும் சீனத் தரப்பில் இருந்து மலை ஏறுபவர்களுக்கும் இடையேயான தொடர்பினை துண்டிக்கும்.
நேபாளத்தில் தற்போது பெருந்தொற்றானது அதிகரித்து வருகிறது.
ஆனால் சீனாவில் இந்த பெருந்தொற்றானது பெரும்பாலும் குறைக்கப்பட்டு விட்டது.