பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது சீரமைக்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டத்திற்கு (Eklavya Model Residential Schools-EMRS) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்கீழ் பழங்குடியின மக்கள் 50% க்கும் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் குறைந்த பட்சம் 20,000 பழங்குடி மக்கள் வசிக்கும் தொகுதிகளிலும் ஒரு ஏகலைவா பள்ளி அமைக்கப்படும்.
நவோதயா வித்யாலயா சமிதியின் வரிசையில் அமைந்த ஒரு தன்னாட்சி பெற்ற சமூகத்தால் இந்த பள்ளிகளானது நடத்தப்படும். பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் இந்த சமூகமானது இயங்கும்.