ஏமனில் ஐ.நா.வின் ஆதரவு பெற்ற போர் நிறுத்தத்தினை சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது.
மேலும் ஹவுதி இயக்கத்தின் பதிலுக்காக சவுதி காத்திருக்கிறது.
இந்த அமைதி நடவடிக்கை சவுதி அரேபியாவால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஹவுதி இயக்கத்திற்கெதிரான ஏமன் நாட்டு அரசின் போராட்டத்திற்கு சவுதி அரேபியா எப்பொழுதும் தனது ஆதரவினை நல்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
விரிவான மற்றும் நீடித்த ஓர் அரசியல் தீர்வை அடையும் முயற்சியில் ஏமனின் அரசியல் கட்சிகளிடையே அமைதிப் பேச்சுவார்தை மேற்கொள்வதற்கான போர் நிறுத்த முன்மொழிதலை ஹவுதி அமைப்பு ஏற்றுக் கொள்ளுமென சவுதி அரேபியா நம்புகிறது.