பிரிவினைவாத குழுக்களின் கூட்டணியான ஏமனின் தெற்கு இடைக்கால சபை (STC), "தெற்கு அரேபியா அரசிற்கான" புதிய அரசியலமைப்பை அறிவித்தது.
அவை வடக்கு ஏமனில் இருந்து சுதந்திரத்தை பெறுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளனர்.
STC ஆனது ஐடாரஸ் காசெம் அல்-ஜுபைடியின் கீழ் 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இது ஆரம்பத்தில் ரியாத் ஒப்பந்தத்தின் மூலம் ஏமன் அரசாங்கத்தில் இணைந்தது ஆனால் பின்னர் ஏடனை மீண்டும் கைப்பற்றி 2020 ஆம் ஆண்டில் சுயாட்சியை உறுதிப்படுத்தியது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், STC "ஆபரேஷன் பிராமிசிங் ஃபியூச்சர்" நடவடிக்கையைத் தொடங்கி, ஹட்ராமவுட் மற்றும் அல்-மஹ்ரா ஆளுகைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.
இந்தப் பகுதி ஏமனின் 80% எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது.
சவுதி தலைமையிலான தாக்குதல்கள் விரைவில் இழந்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றின என்பதோடுமேலும் திரு. அல்-ஜுபைடி அதிபர் சபையில் இருந்து நீக்கப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.
STC தெற்கு ஏமனுக்கு சுயாட்சியை பெற தொடர்ந்து முயல்கிறது ஆனால் பிராந்திய மற்றும் உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக இரு அரசு சூழலை அடைவதில் சவால்களை எதிர்கொள்கிறது.