சர்வதேச ஆகாயவெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியான “ஏரோ இந்தியா– 2019” ன் 12வது பதிப்பானது பெங்களூருவின் எலஹங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மிகப்பெரும் நிகழ்ச்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
“ஏரோ இந்தியா 2019” ஆனது பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்படவிருக்கிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துருவைக் கொண்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சியின் முதலாவது நாள் தொடக்க விழாவாக இருக்கும்.
இரண்டாவது நாளின் கருத்துருவானது, “புதிய தொழில் தொடங்குதல்” தினமாக இருக்கும்.
மூன்றாவது நாளின் கருத்துரு தொழில்நுட்ப தினமாகும்.
நான்காவது நாளின் கருத்துரு பெண்கள் தினமாகும்.
ஐந்தாவது நாளின் கருத்துரு பொதுத் தினமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொதுத் துறை நிறுவனமான கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கடலோர காவற் படைக்கான ரோந்துக் கப்பலை (OPV - offshore patrol vessel - OPV) அர்ப்பணித்து வைத்தார்.