ஆசியாவின் மிகப்பெரிய வான்படை விமானங்களின் கண்காட்சியான 2023 ஆம் ஆண்டு ஏரோ இந்தியா நிகழ்வானது பிரதமர் அவர்களால் பெங்களூருவில் தொடங்கி வைக்கப் பட்டது.
ஐந்து நாட்கள் வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 98 நாடுகளைச் சேர்ந்த 809 நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இராணுவ உபகரணங்கள் மற்றும் புதுமையான விமானவியல் ஆகியவை சார்ந்த தயாரிப்புகளுக்கான வளர்ந்து வரும் ஒரு மையமாக இந்தியா திகழ்வதனை 14வது ஏரோ இந்தியா நிகழ்வானது காட்சிப் படுத்துகிறது.