ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆதார் பதிய அளிக்கப்பட்ட உரிமம் ரத்து
December 18 , 2017 2961 days 1064 0
பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் ஏர்டெல் செலுத்து வங்கியின் வாடிக்கையாளர்களின் செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை பதிய அளிக்கப்பட்ட உரிமத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஏர்டெல் செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதார் விவரத்தை வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும்பொழுது, அவர்களின் அனுமதியின்றி ஏர்டெல் செலுத்து வங்கிக் கணக்கை அந்நிறுவனம் தொடங்குவதாக வாடிக்கையாளர் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன.
இது தொடர்பாக UIDAI ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில் பாரதி ஏர்டெல் மற்றும் ஏர்டெல் செலுத்து வங்கி ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட உரிமம் உடனடியாக தற்காலிக ரத்து செய்யப்படுவதாகக் கூறியுள்ளது.