TNPSC Thervupettagam

ஏர் இந்தியா - டாக்ஸிபோட்களின் முதலாவது பயன்பாடு

October 16 , 2019 2099 days 810 0
  • இந்தியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவானது ஏர்பஸ் விமானத்தின் மாற்று டாக்ஸி கருவியாக டாக்ஸிபோட்டைப் பயன்படுத்திய உலகின் முதலாவது விமான நிறுவனம் என்ற பெருமையைப் பெற்று வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
  • டாக்ஸிபோட் என்பது ஒரு விமான ஓட்டியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அரை இயந்திர மனிதனைக் கொண்ட விமான இழுவை இயந்திரம் ஆகும். இது விமான நிறுத்துமிடத்திலிருந்து ஓடுபாதைக்கும் ஓடுபாதையிலிருந்து விமான நிறுத்துமிடத்திற்கும் விமானத்தைக் கொண்டுச் செல்ல உதவுகின்றது.
  • கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு மற்றும் விமான எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கு டாக்ஸிபோட்டுகள் பெரிதும் உதவுவதாகக் கூறப்படுகின்றது.
  • இந்த இழுவை இயந்திரமானது அதன் பயன்பாட்டின் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் சுமார் 800 கிலோ அளவுள்ள நச்சு வாயுவைக் குறைக்கும் திறன் கொண்டது.
  • இந்த விமான இழுவை வாகனமானது பிரெஞ்சு டிஎல்டி குழுமத்துடன் இணைந்து இஸ்ரேல் விமானத் தொழிற் சாலையால் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்