இந்திய அரசானது இந்தியாவின் முதன்மையான விமான நிறுவனமான ஏர் இந்தியாவினை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அதிகாரப் பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தி கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பானது ரூ.18,000 கோடி (2.4 பில்லியன் டாலர்) ஆகும்.
இந்த மூலோபய முதலீட்டு விலக்குப் பரிவர்த்தனையானது நிர்வாக கட்டுப்பாட்டுடன் சேர்த்து ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% அளவிலான பங்கினைப் பரிமாற்றம் செய்வதையும் உள்ளடக்கியதாகும்.
இந்தப் பரிமாற்றத்தில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா SATS உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நிறுவனமானது, 1932 ஆம் ஆண்டில் கராச்சிக்கும் பம்பாய்க்கும் இடையில் JRD டாடா முதல் விமானத்தை இயக்கியதோடு சேர்த்து தொடங்கப் பட்டது.