ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு (CGSE) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தேசியக் கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் லிமிடெட் மூலம் 100 சதவீத கடன் உத்தரவாதத்தை வழங்கும்.
இந்தத் திட்டம் ஆனது, உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள் MSME நிறுவனங்கள் உட்பட தகுதியுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு 20,000 கோடி ரூபாய் வரை பிணையம் இல்லாத கடனை வழங்க உதவுகிறது.
நிதிச் சேவைகள் துறையானது இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, சந்தைப் பல்வகைப்படுத்தலை ஆதரிப்பது மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.