TNPSC Thervupettagam

ஏற்றுமதி ஆயத்த குறியீட்டு அறிக்கை 2020

August 31 , 2020 1789 days 696 0
  • நிதி ஆயோக்கானது போட்டித்தன்மை நிறுவனத்துடன் (Institute of Competitiveness) இணைந்து ஏற்றுமதி ஆயத்த குறியீட்டு அறிக்கை 2020 என்ற ஒரு அறிக்கயை  வெளியிட்டுள்ளது.
  • இந்திய மாநிலங்களின் ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்யும் வகையிலான முதல் அறிக்கை இதுவாகும்.
  • இந்தக் குறியீடானது மாநிலங்களை நான்கு முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தியுள்ளது - கொள்கை; வணிக சுற்றுச்சூழல் அமைப்பு; ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பு; ஏற்றுமதி செயல்திறன்.

அறிக்கையின் சிறப்பம்சங்கள்

  • தற்போது, இந்தியாவின் ஏற்றுமதியில் 70 சதவீதமானது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்களிப்பில் உள்ளது.

பிரிவு

மாநிலங்கள்

முதல் 3 மாநிலங்கள்

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு.

நிலத்தால் சூழப்பட்ட முதல் 3 மாநிலங்கள்

ராஜஸ்தானைத் தொடர்ந்து தெலுங்கானா மற்றும் ஹரியானா.

முதல் 3 இமயமலை மாநிலங்கள்

உத்தரகண்ட்டைத்  தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சல பிரதேசம்.

சிறந்த 3 ஒன்றியப் பிரதேசங்கள்/நகர்ப்புற மாநிலங்கள்

டெல்லியைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர்.

கொள்கை அளவுருக்களில் முதல் 3 இடம்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மற்றும் ஜார்க்கண்ட்.

வணிக சுற்றுச்சூழல் அளவுருவில்

குஜராத்தைத் தொடர்ந்து  டெல்லி மற்றும் தமிழ்நாடு.

ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பு அளவுருவில்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ராஜஸ்தான்.

ஏற்றுமதி செயல்திறன் அளவுருவில்

மிசோரத்தைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்