ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு ஆகியவற்றுக்கான 3 பணிக் குழுக்கள்
February 25 , 2019 2432 days 827 0
மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியமானது வர்த்தகத்தை எளிமையாக்கவும், ஏற்றுமதிகளை ஊக்குவிக்கவும், வரி இணக்கமுறைகளை மேம்படுத்தவும் 3 பணிக் குழுக்களை நியமித்திருக்கின்றது.
இந்த பணிக் குழுக்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கவனத்துடன் ஏற்றுமதி மேம்பாடு மற்றும் எளிதாக்கல் மீது கவனம் செலுத்த கீழ்க்கண்டவற்றின் மீது செயல்படும்.
மின்னணு வர்த்தகம்
இந்திய ஏற்றுமதிச் சந்தையில் நிகழும் வர்த்தக ஊக்குவிப்பிற்கான தடைகள்
ஏற்றுமதியாளர்களுக்குத் தளவாடச் சேவைகளின் தரத்தை உயர்த்துதல்.