TNPSC Thervupettagam

ஏழாவது மண்டல வானிலை ஆய்வு மையம் - ஜம்மு

June 9 , 2026 5 days 115 0
  • இந்தியாவின் 7-வது மண்டல வானிலை ஆய்வு மையமானது (RMC) 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று ஜம்முவில் திறக்கப்பட்டது.
  • இந்த மண்டல வானிலை ஆய்வு மையம் ஜம்மு & காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்குச் சேவைகளை வழங்குகிறது.
  • இது மாவட்ட அளவிலான முன்னறிவிப்புகள், மலைப்பகுதி சார்ந்த வானிலை முன்னறிவிப்புகள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும்.
  • திடீர் வெள்ளம், மேக வெடிப்பு, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள், இடியுடன் கூடிய மழை மற்றும் அதிக பனிப்பொழிவு ஆகியவற்றுக்கான முன் எச்சரிக்கைகளை இம்மையம் வெளியிடும்.
  • இது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) மண்டல முன்னறிவிப்பு கட்டமைப்பின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது.
  • லக்னோவிலும் ஒரு புதிய மண்டல வானிலை ஆய்வு மையத்தை (RMC) அமைக்க முன்மொழியப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்