TNPSC Thervupettagam

ஏழை நாடுகளுக்கு 2 மில்லியன் கோவிட்-19 தடுப்பு மருந்துகள்

May 25 , 2021 1549 days 652 0
  • அடுத்த 18 மாதங்களில் நடுத்தர மற்றும் குறைவான வருமானமுடைய ஏழ்மையான நாடுகளுக்கு 2 மில்லியன்  அளவிற்கு கோவிட்-19 தடுப்பு மருந்துகளை வழங்க உள்ளதாக ஃபைசர் மற்றும் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
  • இந்த அறிவிப்பானது இத்தாலி நாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய சுகாதார உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த இரு நிறுவனங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தினை உருவாக்கின.
  • ஃபைசர் நிறுவனமானது நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமெரிக்க மருந்து நிறுவனமாகும்.
  • பயோன்டெக் நிறுவனமானது ஜெர்மனியின் மைன்சில் (Mainz) அமைந்துள்ள ஒரு ஜெர்மானிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்