உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை தாங்கிய போர்க் கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49) 32 வருட சேவைக்குப் பிறகு விசாகப்பட்டினத்தில் பணியிலிருந்து விலக்கப் பட்டது.
ஐஎன்எஸ் குக்ரி கப்பலானது 1989 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 23 அன்று மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்டது.
இது மேற்கத்திய மற்றும் கிழக்கத்தியக் கடற்படைகளின் ஒரு அங்கமாக இருந்ததன் சிறப்பம்சத்தைக் கொண்டது.