இந்தியக் கடற்படையானது படையிலிருந்து நீக்கப்பட்ட ஐஎன்எஸ் குல்தார் எனப்படும் கடற்கரையில் நிலை நிறுத்தும் வகையிலான ஒரு கப்பலினை மகாராஷ்டிரா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்தக் கப்பலானது, இந்தியாவின் முதல் கடலடி அருங்காட்சியகமாகவும் செயற்கைப் பவளப்பாறையாகவும் மாற்றப்பட உள்ளது.
இந்தக் கப்பல் ஆனது, போலந்தின் கிட்நியா கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப் பட்டு, 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டது.
இந்தக் கப்பல் ஆனது 1985 முதல் 1995 ஆம் ஆண்டு வரை கிழக்குக் கடற்படை பிரிவின் ஓர் அங்கமாக இருந்தது.
பின்னர் அது அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப் பிரிவில் மீண்டும் நிலை நிறுத்தப் பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று படையிலிருந்து நீக்கப்படும் வரை சேவையாற்றியது.