இந்தியக் கடற்படையின் நீர்நிலையியல் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் சட்லெஜ், மொரீஷியஸ் நீர்நிலையியல் ஆய்வுப் படையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் 35,000 சதுர கடல் மைல் ஆய்வை நிறைவு செய்தது.
இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மொரீஷியஸ் தேசியக் கடலோரக் காவல்படையுடன் இணைந்து கூட்டு பிரத்தியேகப் பொருளாதார மண்டல (EEZ) கண்காணிப்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துகளையும் ஐஎன்எஸ் சட்லெஜ் மேற்கொண்டது.
18வது கூட்டு நீர்நிலையியல் ஆய்வினைக் குறிக்கும் இந்த ஆய்வுப் பணி இந்தியாவின் மஹாசாகர் (பிராந்தியங்கள் முழுவதுமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) கடல்சார் கொள்கையுடன் ஒருங்கமைகிறது.