TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விக்ராந்த்

September 1 , 2022 1085 days 647 0
  • கொச்சினிலுள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப் பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலை இந்தியா தனது படையில் இணைக்க உள்ளது.
  • இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் மூலம் கட்டமைக்கப்பட்டது.
  • இந்தியாவின் கடற்படை வரலாற்றிலேயே இதுவரை கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.
  • இதன் மதிப்பிற்குரிய முன்னோடியாக திகழ்ந்த, 1971 ஆம் ஆண்டு போரில் முக்கியப் பங்கு வகித்த இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயரை, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் கொண்டுள்ளது.
  • எனினும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் அதன் சொந்தத் தளத்தில் தன் சொந்தப் போர் விமானங்களை கொண்டு இருக்காது.
  • இது இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலிடமிருந்துப் பெறப்பட்ட ரஷ்ய நாட்டினால் வடிவமைக்கப்பட்ட சில போர் விமானங்களை இயக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்