ஐஎன் எல்சியூ எல்-56 (IN LCU L56) என்ற கப்பலானது, கடற்படைத் துணைத் தளபதியான அதுல் குமார் ஜெயின் என்பவரால் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
LCU 56 என்பது நீரிலும் நிலத்திலும் இயக்கக்கூடிய ஒரு கப்பலாகும். இது முக்கியமான போர்ப் பீரங்கிகளின் போக்குவரத்து மற்றும் மற்ற பகுதிகளில் அவற்றை நிலை நிறுத்துதல், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், துருப்புகள் மற்றும் உபகரணங்களை கப்பலில் இருந்து கரைக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இது அந்தமான் நிக்கோபார் பிரிவின் (ANC – Andaman Nicobar Command) நாவக் (NAVCC) என்ற பிரிவின் கீழ் நிர்வகிக்கப் படுகின்றது. இது போர்ட் ப்ளேயரை அடிப்படையாகக் கொண்டுச் செயல்படுகின்றது.
இது கார்டன் ரிச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட 100-வது கப்பலாகும்.