ஐ.ஏ.எஸ். & ஐ.பி.எஸ். அதிகாரிகள் அயல்நாட்டு உயரதிகாரிகளின் பரிசுகள்
September 24 , 2021 1416 days 498 0
தற்போதுள்ள விதிகளின்படி, இந்த அதிகாரிகளுக்கு திருமணங்கள், இறுதிச் சடங்குகள், ஆண்டு விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் போன்ற சமயங்களில் அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடன் உத்தியோகப்பூர்வ தொடர்பில் இல்லாத தனிப்பட்ட நண்பர்களிடமிருந்தோ பரிசுகளைப் பெற அனுமதிக்கப் பட்டது.
இருப்பினும் அத்தகையப் பரிசின் மதிப்பு 25,000 ரூபாய்க்கும் மேலாக இருந்தால் அது குறித்து அவர்கள் அரசிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
திருத்தப்பட்ட விதி
1968 ஆம் ஆண்டு அகில இந்தியப் பணி (நடத்தை) விதிகளில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப் பட்டுள்ளது.
இதன்படி, 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்புகள் (பரிசுகளை ஏற்றுக் கொள்தல் (அ) தக்க வைத்துக் கொள்தல்) விதிகளின் விதிமுறைகளுக்கு இணங்க அயல்நாட்டு உயரதிகாரிகளால் வழங்கப்படும் பரிசுகளை ஓர் உறுப்பினர் பெற்றுக் கொண்டு அதனை அவர்களே வைத்துக் கொள்ளலாம்.