ஐஐடி ரூர்க்கியானது பேசிக் (BASIIC - Building Accessible Safe Inclusive Indian Cities) என்ற ஒரு முன்னெடுப்பின் மேம்பாட்டிற்காக தேசிய நகர்ப்புற விவகாரங்கள் துறை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது நாடு தழுவிய அளவிலான மாதிரிக் கொள்கைகளின் பகுதிகளில் பணியாற்றுவதையும் பேசிக்கின் (அனைவரும் அணுகக் கூடிய பாதுகாப்பான அனைவரையும் உள்ளடக்கக் கூடிய இந்திய நகரங்களைக் கட்டமைத்தல்) மேம்பாட்டைக் கொண்டிருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த 2 நிறுவனங்களும் இதில் இந்திய நகரங்களை மிகவும் அணுகக் கூடிய மற்றும் வாழ்வதற்குப் பாதுகாப்பாக மாற்றும் வகையில் அனைத்து வித தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவுள்ளன.