தொழிலாளர் கட்சி தலைமையிலான ஐக்கியப் பேரரசு அரசாங்கம் ஆனது அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தது.
1969 ஆம் ஆண்டில் வாக்களிக்கும் வயதானது 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்ட பிறகு வாக்களிக்கும் வயதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றமாகும்.
முன்மொழியப்பட்ட இச்சட்டத்தின் கீழ், 14 வயதில் இருந்து வாக்களிப்பிற்கானப் பதிவு செயல்முறைகள் தொடங்கும்.
இந்த முக்கிய மாற்றமானது, ஏற்கனவே 16 மற்றும் 17 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றிற்கு இணங்க ஐக்கியப் பேரரசு முழுவதுமான தேர்தல்களை மாற்றுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை அமைப்பு தற்போது வாக்குச் சாவடிகளில் ஐக்கியப் பேரரசில் வழங்கிய வங்கிக் கடன் மற்றும் பற்று அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளும்.