ஐக்கியப் பேரரசு இந்தியா இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்
December 27 , 2020 1783 days 702 0
நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றமானது வரி சார்ந்த பிரச்சினையில் இந்தியாவிற்கு எதிரான ஐக்கியப் பேரரசின் கெய்ர்ன் ஆற்றல் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனமானது தனது கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் உள்ள தனது பங்கை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்திய வரித்துறையானது ரூ.10,247 கோடியை அதனிடம் வரியாகக் கோரியது.
இந்திய அரசானது 2012 ஆம் ஆண்டில் உள்நாட்டு வணிக மறுசீரமைப்பின் மீது பின்னோக்கித் தேதியிட்ட வகையில் கடந்த காலத்திற்கும் பொருந்தக் கூடிய வரிச் சட்டத்தைப் பயன்படுத்தி வரியைக் கோரியது.
இதற்கு முன்பு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வோடபோன் நிறுவனமானது இந்திய அரசிறகு எதிராக ஒரு சர்வதேச நடுவர் வழக்கில் வெற்றி பெற்றது.