ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காலநிலை நடவடிக்கை விருதுகள் 2019
November 29 , 2019 2174 days 759 0
இந்த விருதை மஹிலா ஹவுசிங் சேவா டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமையிலான ஒரு திட்டம் வென்றுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மீதான பின்னடைவை அதிகரிப்பதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்களை ஒழுங்கமைத்து, அதிகாரம் அளித்ததற்காக இந்தத் தொண்டு நிறுவனம் பாராட்டப் பட்டது.
இது இதுவரை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள ஏழு நகரங்களில் ரூ 25,000க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளது.
டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்பெயினில் மாட்ரிட்டில் சிலி அரசு நடத்தவிருக்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 25) இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.
COP25 மாநாடானது டிசம்பர் மாதம் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.