ஐக்கிய நாடுகளின் சமூகப் பொருளாதார சபையின் 4 அமைப்புகளில் இந்தியா
April 18 , 2022 1205 days 457 0
மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் உட்பட ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகச் சபையின் நான்கு முக்கிய அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவிற்கு, தூதர் பிரீத்தி சரண் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அமைப்புகள்
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு
சமூக மேம்பாட்டு ஆணையம்
அரசு சாரா நிறுவனங்களுக்கான குழு மற்றும்
மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஆகும்.