ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் சபையில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்
April 10 , 2022 1216 days 537 0
உக்ரைனில் மனித உரிமைகளை மீறியதாக அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டதையடுத்து, ஐநா மனித உரிமைகள் சபையில் (UNHRC) இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) உறுப்பினர் நாடுகள் ரஷ்யாவை இடை நீக்கம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தனது உறுப்பினர் நாடாக திகழும் காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த சபையின் எந்த ஒரு உறுப்பினர் நாட்டினையும் இடை நீக்கம் செய்ய முடியும்.
ஓர் உறுப்பினர் நாட்டினை இடைநீக்கம் செய்ய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படுகிறது.
இந்த வழக்கில் இதற்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும், 58 வாக்குகள் எதற்கும் வாக்களிக்காமலும் பதிவாகின.
இதில் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.