- 2வது ஐக்கிய நாடுகள் உலகளாவிய நிலையானப் போக்குவரத்து மாநாடானது சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.
- இதில் சீனாவின் பட்டை மற்றும் சாலை திட்டம் மற்றும் CPEC போன்ற திட்டங்களை இந்தியா வலுவாக எதிர்த்தது.
பட்டை மற்றும் சாலை திட்டம்
- இது 2013 ஆம் ஆண்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கிய பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு திட்டமாகும்.
- இந்தத் திட்டமானது சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப் பட்டது.
- இது தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வளைகுடாப் பகுதியினை நிலம் மற்றும் கடல் வழிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
