ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை வீரர்களுக்கான சர்வதேச தினம் 2025 - மே 29
May 31 , 2025 201 days 172 0
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையானது, 1948 ஆம் ஆண்டில் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கையினை நிறுவியபோது இத்தினம் உருவானது.
119 நாடுகளைச் சேர்ந்த சுமார் 68,000 பணியாளர்கள் இராணுவம், காவல்துறை மற்றும் குடிமைப் பணியாளர்கள் தற்போது 11 அமைதி காப்பிற்கான பணிப் படைகளில் பணி ஆற்றுகின்றனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The Future of Peacekeeping" என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பணியாளர்களை அதிக அளவில் பங்களிக்கும் நாடுகளில் 5300 பணியாளர்களுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.