ஐக்கிய நாடுகள் சபையின் அரபு மொழி தினம் – டிசம்பர் 18
December 23 , 2022 967 days 398 0
இது 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) நிறுவப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, 1973 ஆம் ஆண்டில் அரபு மொழியை அதனுடைய ஆறாவது அதிகாரப் பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்ட நாளுடன் இது ஒத்துப் போகிறது.
இது "பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதுடன், அந்த அமைப்பு முழுவதும் அதன் ஆறு அதிகாரப் பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிக்கவும்" முயல்கிறது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஐக்கிய நாடுகள் சுவாஹிலி மொழி தினம் (ஜூலை 7) ஆனது உருவாக்கப்பட்டது.
போர்த்துகீசியம் மற்றும் சுவாஹிலி ஆகிய மொழிகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் மொழி தினத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப் பூர்வமற்ற மொழிகளாகும்.