TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் ஒப்பந்தம்

January 20 , 2026 14 hrs 0 min 35 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் ஒப்பந்தம் ஜனவரி 18, 2026 அன்று அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது.
  • இந்த ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டப் பகுதிகளின் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஒப்பந்தம்  (BBNJ) என்று அழைக்கப்படுகிறது.
  • இது உலகின் மூன்றில் இரண்டு பங்கு பெருங்கடல்களையும் சுமார் 10 மில்லியன் உயிரினங்களையும் உள்ளடக்கிய சர்வதேச நீர்ப்பரப்பில் உள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதிலிருந்து 148 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன; மேலும் 81 நாடுகள் தங்கள் தேசியச் சட்டங்கள் மூலம்  அதை முழுமையாக அங்கீகரித்துள்ளன.
  • பலாவ், கியூபா, மாலத்தீவுகள், சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்சு மற்றும் பிரேசில் ஆகியவை ஒப்புதல் அளித்த நாடுகளில் அடங்கும்.
  • இந்த ஒப்பந்தம் பெருங்கடல்களில் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, நன்மை-பகிர்வு, பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான பிணைப்பு விதிகளை அமைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்