2021 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உரையாற்றிய போது பெரிய நாடுகளின் மத்தியில் இந்தியாவில் தனி நபர் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வானது மிகவும் குறைவு எனக் கூறினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2030 ஐ.நாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான 2030 ஆம் ஆண்டுச் செயல்பாட்டு நிரல்களை அடைவதில் இந்தியாவின் ஈடுபாட்டினைக் குறிப்பிடுகிறது.
ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றமானது ஒரு வளமான, உள்ளார்ந்த மற்றும் நிலையான உலகை உருவாக்க வர்த்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சுவார்தைகளை மேற்கொள்வதற்கான ஒரு தளமாக நிறுவப்பட்டது.