ஐ.நா.வின் உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை 2026
January 13 , 2026 13 days 94 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையால் (UN DESA) தயாரிக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஐந்து பிராந்திய ஆணையங்களின் கூட்டாண்மையுடன் தயாரிக்கப் பட்டது.
ஐ.நா. அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் 2.7 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பதோடுஇது "குறைந்தபட்சம் 1988ம் ஆண்டிலிருந்து காணப்படாத மிகக் கடுமையான வருடாந்திர அதிகரிப்பு" ஆகும்.
இந்த அதிகரிப்பிற்கு, மொத்தச் செலவில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் 10 பெரிய செலவின நாடுகளே காரணமாகும்.
பல வளரும் நாடுகள் அதிக கடன் சுமைகள், குறைந்த நிதிச் சுதந்திரம் மற்றும் மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் தொடர்ந்து போராடி வருகின்றன.
நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளது.
கூட்டாண்மையைப் புதுப்பிக்கவும், கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தால் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.
இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் செவில்லா உறுதிப்பாடு (Sevilla Commitment), உலக சமூக உச்சி மாநாடு மற்றும் COP30 ஆகியவை அடங்கும்.
வேலைவாய்ப்புகள், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளே அமைதி மற்றும் செழிப்பின் அடித்தளம் என்பதை உலக சமூக உச்சி மாநாடு மீண்டும் உறுதிப் படுத்தியது.
மேம்பாட்டிற்கான நிதியுதவி குறித்த 4வது சர்வதேச மாநாடு (FfD4) 2025 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் ஸ்பெயினின் செவில்லாவில் நடைபெற்றது.
வளரும் நாடுகளில் உள்ள 4 டிரில்லியன் டாலர் வருடாந்திர நிலையான வளர்ச்சி இலக்கு நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான ஒரு பாதையை வகுத்த செவில்லா உறுதிப்பாட்டை ஏற்றுக் கொண்டது.