ஐநா அமைதிப்படையினருக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப் படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையானது 2026 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று தீர்மானம் 2823 (2026) ஐ ஏற்றுக்கொண்டது.
சபையில் தங்களின் 2025-26 ஆம் ஆண்டுப் பதவிக்காலத்தில் டென்மார்க் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஐநா அமைதிப்படை பணியாளர்களைத் தாக்கும் குற்றவாளிகளை அடையாளம் காணுதல், விசாரித்தல் மற்றும் வழக்குத் தொடுப்பதை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்வதற்காக நடத்தும் நாடுகளின் பொறுப்பை இத்தீர்மானம் மீண்டும் வலியுறுத்துகிறது.
பொறுப்புக்கூறல் தொடர்பான மூத்த மைய அமைப்பை நியமிக்கவும், விசாரணைகள் மற்றும் வழக்குகள் குறித்த ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஐநா பொதுச் செயலாளருக்கு இது அழைப்பு விடுக்கிறது.
அமைதிப்படையினரின் பாதுகாப்பு குறித்த தீர்மானம் 2589 (2021) மற்றும் தீர்மானம் 2518 (2020) உள்ளிட்ட முந்தைய தீர்மானங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.