TNPSC Thervupettagam

ஐ.நா. நீர் ஒப்பந்தத்தில் முதல் தெற்காசிய நாடு – வங்காளதேசம்

November 14 , 2025 14 hrs 0 min 17 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) நீர் உடன்படிக்கையில் இணைந்த தெற்காசியாவின் முதல் நாடாக வங்காளதேசம் ஆனது.
  • இந்த மாநாடு ஆனது அதிகாரப்பூர்வமாக பன்னாட்டு நீர்நிலைகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த உடன்படிக்கை என்று அழைக்கப் படுகிறது.
  • உலக நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட நீர் வளங்களின் ஒத்துழைப்பு மற்றும் நிலையான மேலாண்மையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீர்ப் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வங்காள தேசம் இந்த உடன்படிக்கையில் இணைந்தது.
  • இந்த நாடானது, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா போன்ற முக்கிய நதிகளை இந்தியா மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்