ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) ஆனது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ஐந்து நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, போர்ச்சுகல், டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஜிம்பாப்வே மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பதவியேற்கும்.
1992-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்த பிறகு, கிர்கிஸ்தான் முதன்முறையாக ஐநா பாதுகாப்பு சபையில் (UNSC) பணியாற்றவுள்ளது.
இந்தப் புதிய உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நிரந்தரமற்ற உறுப்பினர்களுடனும், ஐந்து நிரந்தர உறுப்பினர்களுடனும் (சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) இணைவார்கள்.
நிரந்தரமற்ற உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஐநா பொதுச் சபையினால் (UNGA) இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படுகிறது.