ஐந்து இந்திய மாநிலங்களின் உருவாக்க தினம் 2025 - நவம்பர் 01
November 5 , 2025 22 days 111 0
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்கள் அவற்றின் மாநில உருவாக்க தினத்தைக் கொண்டாடுகின்றன.
இந்த தேதியானது, 1956 ஆம் ஆண்டில் மொழியியல் மற்றும் நிர்வாக அளவுருக்களின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதை நினைவுகூருகிறது.
கர்நாடகா மாநிலம் ஆனது, கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு 1973 ஆம் ஆண்டில் மைசூரு என்பதிலிருந்து கர்நாடகா என மறுபெயரிடப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கன்னட இராஜ்யோத்சவத்தைக் கொண்டாடுகிறது.
கேரள மாநிலமானது மலபார், கொச்சி மற்றும் திருவிதாங்கூர் ஆகியவற்றை இணைத்து 1956 ஆம் ஆண்டில் கேரளாவின் உருவாக்கப்பட்ட தினத்தை கேரள பிறவி தினமாகக் கொண்டாடுகிறது.
மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்த பிறகு, 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டது.
பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்டு, 1966 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஹரியானா உருவானது.
மத்தியப் பிரதேசம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.