ஐந்து கண்கள் வலைப்பின்னல் அமைப்பு
January 2 , 2021
1685 days
1038
- ஜப்பான் தற்போது ஐந்து கண்கள் வலைப்பின்னல் என்ற அமைப்பில் ஆறாவது கண்ணாகச் சேர உள்ளது.
- இது ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.
- இவை சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பதிலளிக்க ஒன்றிணைக்கப் பட்டுள்ளது.
- ஐந்து கண்கள் வலைப்பின்னல் என்ற கூட்டமைப்பின் தோற்றத்தை 1941 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட அட்லாண்டிக் சாசனத்தில் காணலாம்.
- 2020 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், இந்த ஐந்து நாடுகள் சீனாவைத் தனிமைப் படுத்த வேண்டி ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- ஐந்து கண்கள் வலைப்பின்னல் அமைப்பில் இந்தியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று ஜனநாயக நாடுகளைச் சேர்க்க அமெரிக்கா முயன்று வருகிறது.

Post Views:
1038