TNPSC Thervupettagam

ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்

April 20 , 2022 1637 days 884 0
  • இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 150 விக்கெட்டுகளை வீழ்த்திப் புதிய ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
  • இது போன்ற சாதனையைப் படைத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற ஒரு பெருமையையும் இவர் பெற்றார்.
  • டாக்டர். DY.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரது விக்கெட்டுகளை இழக்கச் செய்து புவனேஷ்வர் தனது 150வது விக்கெட்டை எடுத்தார்.
  • மேற்கிந்திய ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ (174) மற்றும் இலங்கையின் புகழ் பெற்ற லசித் மலிங்கா (170) ஆகியோருக்குப் பிறகு, ஐபிஎல் போட்டிகளில் 150 என்ற அளவில் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்