ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய 2040 ஆம் ஆண்டு பருவநிலை இலக்கு
July 9 , 2025 18 days 65 0
1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2040 ஆம் ஆண்டிற்குள் நிகர பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வினை 90% குறைப்பதே இதன் இலக்காகும்.
2040 ஆம் ஆண்டு இலக்கு ஆனது, 2050 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பருவநிலை நடுநிலைமையை அடைய உதவுகிறது.
இந்த இலக்கானது ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
2030 ஆம் ஆண்டிற்கான தற்போதைய இலக்கானது, 1990 ஆம் ஆண்டின் நிலைகளுடன் ஒப்பிடும் போது குறைந்தபட்சம் 55% உமிழ்வைக் குறைப்பதாகும்.
இந்தத் திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியப் போட்டித் திறன் வழிகாட்டி, தூய்மையான தொழில்துறை ஒப்பந்தம் மற்றும் செலவு குறைந்த ஒரு எரிசக்தி செயல் திட்டத்துடன் ஒத்துப் போகிறது.