ஐரோப்பிய ஆணையமானது 12 பில்லியன் யுரோக்களை திரட்டும் தனது முதலாவது பசுமைப் பத்திரங்களை வெளியிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் கிளையானது, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பசுமைப் பத்திரங்களில் 250 பில்லியன் யூரோ வரை வெளியிடுவதற்குத் திட்டம் இட்டுள்ளது.
இது கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து தனது 27 நாடுகளின் மீள்விற்கு நிதி வழங்குவதற்கான தனது திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கானதாகும்.