பரவலாகப் பரவியுள்ள இடம் பெயரும் ஒரு வண்ணத்துப்பூச்சி இனமான ஐரோப்பிய சிவப்பு அட்மிரல் (வனேசா அட்லண்டா), இமாச்சலப் பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தௌலதார் மலைத்தொடரில் உள்ள தர்மசாலை அருகே இந்த இனம் தென்பட்டுள்ளது என்பதுடன், இது நாட்டில் அதன் முதல் தோற்றத்தைக் குறிக்கிறது.
இதன் மூலம், இமாச்சலப் பிரதேசத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மொத்த வண்ணத்துப் பூச்சி இனங்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஐரோப்பியச் சிவப்பு அட்மிரல் இனமானது, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் அதன் விரிவான இடம்பெயர்வுச் செயல்பாடுகளுக்கு நன்கு அறியப்பட்டது ஆகும்.
இந்தியாவில் இது முன்னெப்போதும் பதிவு செய்யப்படாத போதிலும், முன்னதாக மத்திய மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
தெற்காசியாவில் 1929 ஆம் ஆண்டில் பலுசிஸ்தானில் அதன் கடைசிப் பதிவு உறுதிப் படுத்தப் பட்டது.
பின்னர், 93 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் லோயர் சித்ரல் பகுதியில் இது மீண்டும் தென்பட்டது.