ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு வருகை
October 29 , 2019 2109 days 639 0
ஐரோப்பிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் (Members of the European Parliament - MEPs) இரண்டு நாள் பயணமாக காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர் உள்ளூர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் இராணுவம், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இதர 15 பிரதிநிதிகளிடமிருந்து கருத்துக்களைப் பதிவு செய்வதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் மக்களைச் சந்திக்கக் கோரியதனால் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் டேவியின் வருகையானது ‘ரத்து செய்யப்பட்டது’.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலையில் தால் ஏரியில் படகுச் சவாரியும் செய்தனர்.