சமீபத்தில் இந்தியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC- United Nation’s Human Rights Council) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
UNHRC - ஆனது மனித உரிமைகளை ஊக்கப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் ஐ.நா.வின் உயரிய அமைப்பாகும்.
மொத்தமுள்ள 193 நாடுகளில் 188 நாடுகளின் வாக்குகளைப் பெற்று ஆசிய-பசுபிக் பிரிவில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பங்குபெற்ற நாடுகளில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று UNHRC-ல் இடம் பிடித்துள்ளது.
UNHRC-ன் 18 புதிய உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தனிப்பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பங்குபெறும் நாடுகள் குறைந்தபட்சம் 97 வாக்குகளைப் பெற வேண்டும்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பணியாற்றுவார்கள்.
இதன்மூலம் UNHRC-க்கு இந்தியா 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்தியா 2006-2009, 2011-2014 மற்றும் 2014-2017 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.