ஐ.நா.வின் ‘லீஜியன் ஆப் மெரிட்’ (Legion of Merit) விருது
August 21 , 2018 2682 days 914 0
வாஷிங்டன் DCயின் பெண்டகனில் இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற தலைமை இராணுவ அதிகாரியான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. வின் ‘லீஜியன் ஆப் மெரிட்’ (தளபதிக்கான பட்டம்) விருது வழங்கப்பட்டது.
இந்திய இராணுவத்திற்கு தனது பங்களிப்பை ஆற்றியதற்காக ஜெனரல் தல்பீர் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு இராணுவ தொடர்புகளில் பங்காற்றியதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இராணுவ வீரருக்கு இவ்விருது வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன் இவ்விருது 1946ஆம் ஆண்டு ஜெனரல் இராஜேந்திரசிங் ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது.
லீஜியன் ஆப் மெரிட் விருது 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.