தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) உருவாக்கிய பசுமைக் குடிலில் ஒடிசாவில் முதல் முறையாக கண்கவர் யூஸ்டோமா பூக்கள் பூத்துள்ளன.
முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட யூஸ்டோமா, தற்போது உள்ளூரில் பயிரிடப் படுவதுடன், விவசாயிகள் இந்த அயல்நாட்டுத் தாவரத்தை வளர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.
NBRI ஆனது சம்பல்பூர் மாவட்டத்தில் வெப்பமான சூழ்நிலையில் யூஸ்டோமாவை வெற்றிகரமாக வளர்த்தது, இது ஒடிசாவின் காலநிலையில் இந்த தாவரம் செழித்து வளர முடியும் என்பதைக் காட்டுகிறது.
மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட யூஸ்டோமா தாவரத்தினை ஒடிசாவில் ஆண்டிற்கு இரண்டு முறை வளர்க்கலாம்.