TNPSC Thervupettagam

ஒடிசாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம்

November 15 , 2026 6 hrs 0 min 39 0
  • ஒடிசாவில் உள்ள டெப்ரிகர் (Debrigarh) வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளூர் மக்களால் “மகாபல பாகா” (Mahabala Bagha) என்று அழைக்கப்படும் ராயல் வங்காளப் புலி ஒன்று சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளால் காணப்பட்டதுடன், அது பின்னர் ஒரு கடமானையும் (Sambar deer) வேட்டையாடியது.
  • ராயல் வங்காளப் புலி (பாந்தெரா டைகிரிஸ்) பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அருகிய வரும் இனமாக (Endangered - EN) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயம் ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் ஹிராகுட் நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
  • டெச்சுவான்–லக்கன்பூர் வனப்பகுதி வழியாக இப்புலி நுழைந்துள்ளது; இதன் பூர்வீகம் குறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவை ஆய்வு செய்து வருகின்றன.
  • சுமார் 500 சதுர கி.மீ. மையப் பகுதி உட்பட சுமார் 900 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயத்தை புலிகள் காப்பகமாக அங்கீகரிப்பதற்கான முன்மொழிவிற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்