TNPSC Thervupettagam

ஒடிசாவில் PMGSY-IV திட்டம்

May 9 , 2026 16 hrs 0 min 13 0
  • மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனாவின் நான்காம் கட்டத்தை (PMGSY-IV) ஒடிசாவில் 2026 ஆம் ஆண்டு மே 1 அன்று ₹1,700 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.
  • 2024–2025 முதல் 2028–2029 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளுக்கான PMGSY-IV திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ஒடிசாவின் எட்டு மாவட்டங்களில் 1,701.84 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 827 சாலைத் திட்டங்களை அமைப்பதன் மூலம் கிராமப்புற இணைப்பை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கந்தமால், கியோஞ்சர், கோர்தா, கோராபுட், மல்கன்கிரி, நபரங்கபூர், ராயகடா மற்றும் சம்பல்பூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
  • இத்திட்டத்தின் மூலம் 898 கிராமங்கள் பயனடையும் என்பதோடு, கிராமப்புறங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகலையும் மேம்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்