ஒடிசாவில் உள்ள இருபத்தி நான்கு கடலோரக் கிராமங்கள் யுனெஸ்கோ அமைப்பினால் சுனாமி நடவடிக்கைகளுக்கான தயார் நிலை அங்கீகாரத் திட்டத்தின் (TRRP) கீழ் சுனாமிக்கு தயார் நிலையில் உள்ளவை ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
TRRP என்பது கடலோரப் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தால் (IOC) உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ, சமூக அடிப்படையிலான திட்டமாகும்.
ஆபத்து விழிப்புணர்வு, வெளியேற்றத் திட்டமிடல், எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சமூகப் பயிற்சிகளை மதிப்பிடுவதற்கு இந்தத் திட்டம் பன்னிரண்டு தயார்நிலை குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் தேசிய சுனாமி தயார்நிலை அங்கீகார வாரியம் (NTRB), இந்திய சுனாமி முன் எச்சரிக்கை மையம் (ITEWC) மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) ஆதரவுடன் TRRP திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.
இந்த அங்கீகாரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கத் தக்கது என்பதோடுமேலும் இந்தக் கிராமங்கள் சுனாமி அபாயங்கள், வெளியேற்ற வரைபடங்களைப் பொது மக்களுக்குக் காட்சிப் படுத்துதல், 24 மணி நேர எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மாதிரிப் பயிற்சிகளில் பங்கேற்கச் செய்தல் பற்றிய அதிகபட்ச விழிப்பு உணர்வைப் பேண வேண்டும்.