TNPSC Thervupettagam

ஒடிசா ரசகுல்லா

July 30 , 2019 2115 days 777 0
  • ஒடிசாவின் ரசகுல்லாவிற்குப் புவிசார் குறியீடு (geographical indication - GI) வழங்கப் பட்டுள்ளது.
  • ஒடிசா சிறு தொழிற்சாலைகள் கழகமானது ஒடிசா ரசகுல்லாவைப் புவிசார் குறியீட்டிற்காகப் பதிவு செய்து, அதனைச் சொந்தம் கொண்டாடும் நிறுவனமாக விளங்கும்.
  • இது ரசகுல்லாவிற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பெற்று விளங்கும்.
  • ஒடிசாவில் உள்ள அனைத்து 30 மாவட்டங்களும் புவிசார் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ள புவியியல் பகுதிகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
  • ஒடிசா ரசகுல்லாவானது உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாத் ஆலயச் சடங்குகளுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்